உன் மழலை முகம்
என்னை எப்பொழுதும்
உன்னையே காணும்படி
எனக்கு நிபந்தனை விதிக்குதடி,
பிழையில்லா
உன் பேச்சு
மழலை மொழியை வென்று
புது சரித்திரம் படைக்குதடி ,
எல்லையற்ற உன் பேரழகோ
என்னை தினம் தினம்
ஆட்டி வைக்குதடி
அருகில்
நீ நடக்கும் போதே
உன் நிழலை
என் கைகள்
எட்டிப்பிடித்து ஏங்குதடி,
தோழியுடன் நீ பேசி சிரிக்க
என் முகமோ
எல்லையற்ற இன்பம்
கொள்ளுதடி,
உன்னழகை
நான் ரசிக்கும் வேளையிலே
உன் ஓர விழி
என்னைப் பார்க்க -வெட்கத்தில்
என் முகமும் சிவக்குதடி,
ஒவ்வொரு நாளும்
உன் முகம் காணவே
என் விழிகள் ஓயாமல் அலைகின்றன
என்ன மாயமோ.........
என் ஆசை காதலியே 💖
ம.சந்திரன் தமிழன்
0 Comments