உணர்வுகளை வருத்தும்
பகையை தவிர்த்து
வாழும் உன்னதமான
வாழ்வை தேடி
பயணிக்கிறேன்
உடலை வருத்தும்
பிணிக்கு உடலில்
தங்க இடம் இல்லை -என
விரட்டியடிக்கிறேன்
மனதை வருத்தி
உறவை பிரிக்கும்
கடன் இன்றி
வாழ எளிமையான
வாழ்க்கையை
தேர்ந்தெடுக்கிறேன்
கடனை தவிர்த்து
பிணியை துரத்தி
பகையை வென்று
ஒரு மகிழ்ச்சியான
வாழ்க்கையை வாழ
ஆசை ,
ஆயிரம் ஆண்டுகள்
உன்னுடன் ......
என் காதல் கதவை
திறந்த 💖
என் ஆசை
மூன்றெழுத்து தேவதையே
ம.சந்திரன் தமிழன் ♥
0 Comments