தூர நின்னே தூக்கிப்போனா
பட்டு சேலை கட்டிக்கிட்டு
பாவக்காய வாங்கிட்டு - என்னை
பாக்காத மாதிரி தான்
பாசத்த வீசி போனா.
கண்ணசைவு காட்டிப்புட்டு
காதல் வேதனையில
கண்ணீரோட கடந்தவளே.
ஒத்த பார்வையில்
மொத்த உசுரையும்
கொசுவத்துல சுருட்டிகிட்டு
காதலித்தான் தந்து போனா.
சந்தைய சாக்கா வாச்சி
சந்திரன பாக்க வந்த - என்
சுந்தரியே சத்தியமா
சொல்லுறேன்டி - என்
பொஞ்சாதி நீதானடி.
நெடிக்கு ஒருதடவ
துடிக்கும் இதயம் கூட
உன்ன காணாததால
துடியா துடிச்சு போச்சு.
ஏக்கத்துல கண்ணு ரெண்டும்
சாமத்துல கண்ணீர வடிச்சு
யாருக்கும் தெரியாம
வேதனையில குமுறுதடி.
கூடியிருந்தா கூட
என் சோகத்த சொல்லி அழ
ஒத்த நாதியில்லாம
தவியா தவிக்கிறேன்டி.
வயித்து பொழப்புக்காக
சந்தைக்கு வந்தவன
சங்ககாலத்துல தள்ளிப்புட்டு
சந்தோசமா போறவளே.
பாக்காத தவிப்பத்தான்
நொடியில நொறுக்கிபுட்டா,
பாத்த ஒத்த நொடிக்கு தான்
கண்ணு ரெண்ட கலங்கிப்புட்டா.
தூர போன போதும்
போக மனசில்லாமல்
கையசைத்து காட்டிட்டு
என் உசுர எடுத்து போன.
கல்நெஞ்சகாரி
உடம்பு இங்கிருக்க
யாருக்கும் தெரியாம
உசுர மட்டும்
தூர நின்னே தூக்கிப்போன.
ம.சந்திரன் தமிழன் ❤️
#ஊருகத
#தூர_நின்னே_தூக்கிப்போனா
0 Comments