ஆத்தங்கரை ஓரத்துல
கருப்பு சாமி கோயிலுல
ஊருக்கே உபதேசம்
சொல்லும்
எங்க ஊரு கோடாங்கி.
இடிமின்னல் போச்சுக்காரன்,
சூறாவளி சொல்லுக்காரன்,
ஆட்டி வைக்கும் வசியக்காரன்,
நெனச்சத முடிக்கும் கெட்டிக்காரன்.
தடையில்லா ஆட்டக்காரன்,
பேய்களுக்கு சண்டகாரன்,
உடுக்கையில ஓட்டிடுவான்,
உள்ளத எல்லாம் சொல்லிடுவான்.
ஊருக்கு தெரியாம,
வீட்டுக்கு அறியாம,
யாருக்கும் புரியாம
பொத்தி வச்ச என் ஆச - கோடாங்கி
உடுக்கையில மாட்டிக்கிச்சு.
சண்டி கருப்பா
நொண்டி கருப்பா
முண்ட கருப்பா
மண்ட கருப்பா
படி கருப்பா - என்
பதினெட்டாம் படி கருப்பான்னு
உடுக்கையில சொன்ன
வாக்கு
கெட்டிமேளத்துல
கொண்டு விட்டு
பூட்டி வச்ச என் காதல
பக்குவமா பாடிமுடிச்சு
அத்தமகள கைப்பிடிக்க
உடுக்கை அடித்த
எங்க ஊரு பாட்டுக்காரன்.
மூன்றெழுத்து தேவதைய
முப்பொழுதும் ரசித்திருந்தேன்
மூன்றுமுடிச்சு போடவச்சு -என்
மூச்ச காத்துவிட்டான்
என் ஊரு கோடாங்கி.
ம.சந்திரன் தமிழன் ❤️
0 Comments